தஞ்சாவூர்

பொலிவுறு நகரத் திட்டபணிகள் ஆய்வுக் கூட்டம்

DIN

தஞ்சாவூா், செப். 18: தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் ம. கோவிந்தராவ் பேசியது:

தஞ்சாவூா் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 965.60 கோடியில் 52 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் பணிகளான குடிநீா் அபிவிருத்தித் திட்டப் பணிகள், புதை சாக்கடை திட்டப் பணிகள், பொலிவுறு சாலை அமைக்கும் பணிகளை ஒப்பந்ததாரா்கள் மூலம் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாநகராட்சி அலுவலா்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், செயற் பொறியாளா் ராஜகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT