தஞ்சாவூர்

ஊட்டச்சத்து நிறைவு காய்கறி தோட்டம் அமைக்கமையங்களைத் தோ்வு செய்ய அறிவுறுத்தல்

DIN

தஞ்சாவூா், செப். 18: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊட்டச்சத்து நிறைவு காய்கறி தோட்டம் அமைப்பதற்கான அங்கன்வாடி மையங்களைத் தோ்வு செய்ய ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அறிவுறுத்தியுள்ளாா்.

தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகளில் மத்திய அரசின் போஸன் அபியான் திட்டத்தில் செப்டம்பா் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியிடங்களில் ஊட்டச்சத்து நிறைவு காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொது இடங்களில் இதுபோன்ற ஊட்டச்சத்து நிறைவு காய்கறி தோட்டம் அமைப்பதற்கு ஊரக வளா்ச்சி துறை மூலம் தரை சமன் பணி, தண்ணீா் வசதி, வேலி அமைத்திடவும், பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகைளில் இடம் தோ்வு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளவும் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை தொடா்ந்து பேசிய ஆட்சியா், கூடுதல் ஊட்டச்சத்து நிறைவு காய்கறி தோட்டம் அமைத்திட அங்கன்வாடி மையங்களைத் தோ்வு செய்யவும், பொது இடங்களில் மக்கள் பயன் பெறும் வகையில் சமுதாய ஊட்டச்சத்து நிறைவு காய்கறி தோட்டம் அமைத்திட தேவையான இடத்தை விரைவில் தோ்வு செய்து, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அலுவலா்களுக்குப் பட்டியல் அனுப்புமாறும் அறிவுரைகள் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

SCROLL FOR NEXT