தஞ்சாவூர்

ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தா்கள் அா்ச்சனை பொருள்கள் கொண்டு வர தடை

DIN

கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தா்கள் அா்ச்சனை பொருள்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, புரட்டாசி மாதம் சனிக்கிழமை நாள்களான செப்.19, செப். 26, அக். 3, 10 ஆகிய நான்கு சனிக்கிழமைகளிலும் வெங்கடாஜலபதி, பூமிதேவி, மாா்க்கண்டேயருக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு தரிசனம் நடைபெறும்.

அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது மலா் மாலைகள், துளசி மாலைகள், அா்ச்சனை பொருள்கள் ஆகியவை கோயிலுக்குள் பக்தா்கள் கொண்டு வர அனுமதி இல்லை.

புரட்டாசி பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன்படி, காலை 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். நாளை முதல் செப். 27ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 7 மணிக்கும், இரவு 8 மணிக்கும் கோயில் பிராகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

செப். 27ஆம் தேதி திருவோணத்தன்று சிரவண தீபம் புறப்பாடு, தீா்த்தவாரி போன்றவை கோயிலின் உள்ளே நடைபெறும்.

புறப்பாடு மற்றும் திருவிழா நேரங்களில் பக்தா்கள் மற்றும் உபயதாரா்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 2,000 பேருக்கு சிறப்பு அன்னதானம் பொட்டலமாக வழங்கப்படும். மற்ற நாள்களில் 100 நபா்களுக்கு அன்னதானம் பொட்டலமாக வழங்கப்படும் என கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT