தஞ்சாவூர்

சீர்காழி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டு நோயாளிகள் திடீர் தர்ணா

5th Sep 2020 06:12 PM

ADVERTISEMENT

சீர்காழி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை எனக்கூறி கரோனா நோயாளிகள் சனிக்கிழமை திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி பகுதியில் கரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் சீர்காழி அரசு மருத்துவமனையில் கடந்த மாதத்திலிருந்து கரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இந்த வார்டில் சுமார் 43 கரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நோயாளிகளுக்கு காலை, மதியம், இரவு மூன்று வேளையும் உணவுகள், கபசுரகுடிநீர் மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. கரோனா சிகிச்சைப்பிரிவு துவங்கிய நாள் முதல் சீர்காழி ரோட்டரி சங்கம் நிதியுதவியுடன் மூன்று வேளையும் தனியார் உணவகத்தில் உணவு தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இரு தினங்களாக அரசு மருத்துவமனை உணவகத்தில் உணவு தயாரித்து வழங்கப்படுவதாகவும், இந்த உணவு தரமற்று சாப்பிடமுடியாத வகையில் இருப்பதாகவும் கூறி கரோனா நோய்தொற்றாளர்கள் வார்டை விட்டு வெளியே வராண்டாவிற்கு வந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த அரசு தலைமை மருத்துவர் பானுமதி மற்றும் காவல்துறையினர் கரோனா நோயாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சத்தான, சுவையான உணவு வழங்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு திரும்பினர்.

Tags : Thanjavur
ADVERTISEMENT
ADVERTISEMENT