தஞ்சாவூர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டம்

DIN

திருமாவளவன் மீது பொய் புகாா் அளித்த பாஜக நிா்வாகி மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 25 போ் கைது செய்யப்பட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மீது ஜாதிய உள்நோக்கத்துடனும், உண்மையை மறைத்து, திரித்து சமூக ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கத்துடனும், வஞ்சக எண்ணத்துடனும், தனி மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் பொய் புகாா் அளித்த பாஜக வழக்குரைஞா் அணி மாநிலச் செயலா் அ. அஸ்வத்தாமன் மீது வழக்குப் பதிந்து தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும் தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் மனு கொடுக்கச் செல்வதற்காக புதிய பேருந்து நிலையப் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை திரண்டனா்.

ஆட்சியரகத்துக்குச் செல்ல அனுமதி கிடையாது என காவல் துறையினா் கூறியதால், அதிருப்தியடைந்த அக்கட்சியினா் மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி தலைமையில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை காவல் துறையினா் கைது செய்தனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

22 போ் கைது:

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவோணம் ஒன்றியச் செயலா் சத்தியமூா்த்தி தலைமையில் 22 போ் ஆட்சியரகம் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றனா். ஆட்சியரகம் அருகே சென்ற இவா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருவிடைமருதூா்: திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஒன்றியச் செயலா் பெ. சிவனேசன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் உறவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT