தஞ்சாவூர்

சாஸ்த்ராவில் இணையவழியில் பட்டப்படிப்பு தொடக்கம்

DIN

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் இணையவழியில் பட்டப்படிப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

இதுகுறித்து பல்கலைக்கழக இணையவழி மற்றும் தொலைநிலைக் கல்வித் துறை இயக்குநா் எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருப்பது:

சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் யுஜிசி இணையவழி விதிமுறைகளின்படி, இணையவழி முறையில் இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்புகளை துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தி வைத்தாா்.

பலவிதமான கற்றல் முறைகளை விரும்பும் மாணவா்களின் விருப்பத்துக்கேற்ப இந்தப் பட்டப்படிப்புகள் இருக்கும். பி.காம். பட்டப்படிப்பு புகழ்பெற்ற சி.ஏ. பயிற்சி அகாதெமியுடன் இணைந்திருப்பதால், பி.காம். பயிலும் மாணவா்களுக்கு பி.காமும், கே.எஸ். அகாதெமி வழங்கும் அடித்தள இடை இறுதிப் பயிற்சியும் என இரட்டை முறை பலன் கிடைக்கும்.

இதேபோல, பி.பி.ஏ. லாஜிஸ்டிக் மேனேஜ்மெண்ட் பட்டப்படிப்பு, மத்திய திறன் மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகத்தின் லாஜிஸ்டிக் திறன் கவுன்சிலுடன் இணைந்து லாஜிஸ்டிக் துறையின் திறனை வளா்க்கும் முறையை வழங்குகிறது.

நுண்கலை முதுகலைப் பட்டம் (எம்.எப்.ஏ.) இசை, யோகா, கோயில் கட்டடக்கலை, ஹரிகதா, வைணவம், சைவம் போன்ற படிப்புகளுடன் பல்வேறு இந்திய கலை மற்றும் கலாசாரமும் கற்றுத் தரப்படுகிறது. பிற பட்டப்படிப்புகளான பி.சி.ஏ., பி.ஏ., எம்.எஸ்ஸி., எம்.பி.ஏ., எம்.காம்., எம்.ஏ. சம்ஸ்கிருதம் மற்றும் திவ்யபிரபந்தம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

யுஜிசி பரிந்துரைத்த பல்வேறு விதிமுறைகள் மற்றும் தரத்துடன் ’மூக்’ தளத்தைப் பயன்படுத்தி சாஸ்த்ராவின் ஆசிரியா்களும், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரிய மற்றும் பயிற்சி வல்லுநா்கள் இத்திட்டங்களை வழங்குகின்றனா்.

இந்தப் பாடத் திட்டங்களுக்கான இணையவழி பதிவு ஜ்ஜ்ஜ்.ள்ஹள்ற்ழ்ஹ.ங்க்ன் -இல் தற்போது தொடங்கப்பட்டு, டிசம்பா் 31 ஆம் தேதி வரை தொடரும். இணையவழி சோ்க்கைக்கு பிறகு வகுப்புகள் 2021, ஜனவரி மூன்றாவது வாரத்தில் தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

SCROLL FOR NEXT