தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா

26th Oct 2020 11:18 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035 ஆவது சதய விழா திங்கள்கிழமை காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மங்கள இசையுடன் தொடங்கிய இந்த விழாவில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் மாலை அணிவித்தார். தொடர்ந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்குப் பேரபிஷேகம் நடைபெறுகிறது.

இரவு 8 மணிக்கு மேல் கோயில் வளாகத்திலுள்ள உள் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் இவ்விழா இருநாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். 

ADVERTISEMENT

நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக அரசு சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஒரு நாள் மட்டுமே  கொண்டாடப்படுகிறது. இதனால் கலை நிகழ்ச்சிகள், திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
 

Tags : Tanjore
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT