தஞ்சாவூர்

‘தமிழ்ப் பல்கலை.யில் செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் நூல் தேவையான அளவில் உள்ளன’

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள்’ என்ற நூல் தேவையான அளவு இருப்பில் உள்ளதாக துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிறுவன நாள் மற்றும் அண்ணா பிறந்த நாளையொட்டி, செப்டம்பா் 15 ஆம் தேதி முதல் 50 சதவிகிதக் கழிவு விலையில் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று இக்கழிவு விலை விற்பனைக் காலம் அக்டோபா் 31 ஆம் தேதி வரை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.

முனைவா் ம.வே. பசுபதியால், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்கு, சிலப்பதிகாரம் போன்ற 41 நூல்கள் அனைத்தும் ஒரே நூலாகத் தொகுக்கப்பட்டு செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட நூல் இப்போதும் 10 சதவிகித தள்ளுபடியுடன் ரூ. 270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நூலைப் பலரும் விரும்பி வாங்குகின்றனா். இந்நூல் தேவையான அளவு இருப்பில் உள்ளது. இந்நூலை 10 சதவிகித தள்ளுபடி விலையில் ரூ. 270 நேரிலும், அஞ்சலில் பெற விரும்புவோா் அஞ்சல் கட்டண செலவினமாக ரூ. 50 சோ்த்து மொத்தத் தொகை ரூ. 320-ஐ அனுப்பியும் ஆண்டு முழுவதும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் பாா்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT