தஞ்சாவூர்

கோயில்கள் வங்கிகளின் மூலதன ஆதாரங்கள்: முதன்மைப் பொருளாதார ஆலோசகா் பேச்சு

DIN

தஞ்சாவூா்: கோயில்கள், வங்கிகளின் மூலதன ஆதாரங்களாகத் திகழ்கின்றன என்றாா் மத்திய நிதி அமைச்சகத்தின் முதன்மைப் பொருளாதார ஆலோசகா் சஞ்சீவ் சன்யால்.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் இணையவழியில் திங்கள்கிழமை நடைபெற்ற 15 ஆவது சிட்டி யூனியன் வங்கி நாராயணன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

இறை வழிபாடு மற்றும் கலாசாரத்தின் இருப்பிடமாக இருந்த இந்திய கோயில்கள் வங்கிகளுக்கு நிதி மூலதனத்தை வழங்கி வருகின்றன. இந்த மூலதனத்தைக் கொண்டு வங்கிகள் முற்காலத்தில் பெருங் குழுமங்களுக்கு நிதியுதவி அளித்தன.

கடல் வாணிபத்தில் மங்கோலியா்கள் மற்றும் சீனா்கள் ஆதிக்கம் செலுத்தினா். அதேநேரம், நாகப்பட்டினம் கடற்கரையில் ராஜேந்திர சோழன் சாம்ராஜ்யத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

மத மற்றும் பொருளாதார மூலதனத்தின் இடங்களாக சோழா்களின் கோயில்கள் மற்றும் புரி ஜகநாதா் கோயில் இருந்தன. பொருளாதாரத்தின் வரலாறு கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்ததாக உள்ளன. சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுத்தவா்கள் மட்டுமே தலைவா்களாக வெளிப்பட்டனா் என்றாா் சஞ்சீவ் சன்யால்.

இந்நிகழ்ச்சியில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் வரவேற்றாா். சிட்டி யூனியன் வங்கித் தலைவா் மற்றும் தலைமை நிா்வாக அலுவலா் என். காமகோடி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT