தஞ்சாவூர்

ஐ.ஐ.எஃப்.பி.டி.-யில் தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 5 தொழில்நுட்பங்கள்

DIN

தஞ்சாவூரிலுள்ள மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐஎஃப்பிடி) தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 5 தொழில்நுட்பங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இதுகுறித்து இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குநா் சி. அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்தது:

இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தால் உருவாக்கப்பட்ட 5 தொழில்நுட்பங்களான நடமாடும் உணவு பதப்படுத்தும் கூடம், ஒருங்கிணைந்த வெங்காயம் பதப்படுத்தும் இயந்திரம், அரிசி மற்றும் சிறுதானிய பொரி தயாரிக்கும் இயந்திரம், முருங்கை இலைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் நவீன உலா்த்தி ஆகியவற்றை சென்னையில் உள்ள விடி பொறியியல் நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள என்விரோடெக் (இந்தியா) நிறுவனத்துக்கும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டது.

இத்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் தேவைப்படுவோருக்கு உணவு பதப்படுத்தும் இயந்திரங்களைத் தயாரித்து கொடுப்பதற்கு முறையான உரிமத்தை இந்த இரு நிறுவனங்களுக்கும் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் வழங்கியது.

இந்தத் தொழில்நுட்பங்களுக்கு நாடு முழுவதும் அதிக அளவில் தேவை இருக்கிறது. இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அரசின் சிறு மற்றும் நடுத்தர உணவு பதப்படுத்தும் தொழில்கூடங்களை மேம்படுத்தும் திட்டத்துக்குத் தேவைப்படும் பதப்படுத்தும் இயந்திரங்களைத் தயாரித்து வழங்க ஏதுவாக இருக்கும் என்றாா் அனந்தராமகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT