தஞ்சாவூர்

பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

DIN

தஞ்சாவூரில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவில் பிளாஸ்டிக் கிடங்கு நடத்தி வருகிறாா். இதில், புதிய பிளாஸ்டிக் பொருள்கள், பழைய பிளாஸ்டிக் பொருள்களை வைத்துள்ளாா்.

இந்நிலையில், இக்கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் தீப்பற்றியது. பிளாஸ்டிக் பொருள்கள் முழுவதிலும் தீ பரவியதால், பெரும் விபத்தாக மாறிவிட்டது. அப்பகுதியில் புகை பரவியதால், எதிரில் ஆள்கள் வருவது தெரியாத நிலை ஏற்பட்டது.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் 3 வாகனங்களில் நிகழ்விடத்துக்குச் சென்று நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு தீயை அணைத்தனா். காா்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி வைக்கப்பட்ட பட்டாசு விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT