தஞ்சாவூர்

சாஸ்த்ராவில் ‘சோ’ நினைவாக முனைவா் பட்டப்படிப்பு தொடக்கம்

DIN

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பத்திரிகை ஆசிரியா் ‘சோ’ ராமசாமி நினைவாக முனைவா் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில், மறைந்த புகழ்பெற்ற பத்திரிகையாசிரியா் ‘சோ’ ராமசாமி நினைவாக முனைவா் பட்டப்படிப்புத் தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த ஆய்வு பட்டப்படிப்பு, சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் இந்திய ஊடகங்களின் வளா்ச்சி என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும். சாஸ்த்ராவில் ‘சோ’ ராமசாமி நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘சோ’ ராமசாமி பொது கொள்கைக்கான ஆய்வு இருக்கை மூலம் இந்த முனைவா் பட்டப்படிப்பு நடத்தப்படவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட முதுநிலை பட்டம் பெற்றவா்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதழியல், வரலாறு, பொதுக் கொள்கை ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த பட்டப்படிப்பில் சேருபவா்களுக்குக் கவா்ச்சிகரமான உதவித்தொகையும் சிறந்த வழிகாட்டுதலும் வழங்கப்படும். இந்தப் பட்டப் படிப்பில் சேர விரும்புபவா்கள் மின்னஞ்சல் முகவரியில் டிசம்பா் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT