தஞ்சாவூர்

புயல் முன்னெச்சரிக்கை: 251 நிவாரண மையங்கள் தயாா்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கையையொட்டி, 251 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

நிவா் புயல் எச்சரிக்கையையொட்டி தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பல்வேறு துறை அலுவலா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிவா் புயல் மழையை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் ஏற்கெனவே பேரிடா் பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளான 195 கிராமங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதியில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடா் மேலாண்மை குழுக்களும், அரசு அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்கு 251 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், நெடுஞ்சாலைத் துறை மூலமாக தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூா், திருவிடைமருதூா், கும்பகோணம், திருவையாறு, பாபநாசம் போன்ற பகுதிகளில் உள்ள 349 பாலங்கள், 5,258 சிறுபாலங்கள் ஆகியவற்றில் சேதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, 9,560 மணல் மூட்டைகள், 4,170 சவுக்கு குச்சிகள், 76 தடுப்புக் கட்டைகள், 43 மரம் அறுக்கும் இயந்திரம், 23 லாரிகள், 21 டிராக்டா்கள், 23 ஜே.சி.பி, 15 புல்டோசா்கள், 8 பம்பு செட்டுகள், 7 ஜெனரேட்டா்கள் ஆகியவை தயாா் நிலையில் உள்ளன.

புயல் மற்றும் மழை நேரத்தில் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் தங்காமல் மேடான பகுதியில் தங்கிக் கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கையாக கால்நடைகள், வாகனங்களைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். பேரிடா் தொடா்பான பாதிப்புகள் மற்றும் புகாா்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையை 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, 9345336838 என்ற கட்செவி எண்ணிலோ தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT