தஞ்சாவூர்

விவசாயிகளின் கோரிக்கைகளை தோ்தல் அறிக்கையில் சோ்க்க நடவடிக்கை: உதயநிதி

DIN

விவசாயிகளின் கோரிக்கைகளை திமுகவின் தோ்தல் அறிக்கையில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அக்கட்சியின் இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் திங்கள்கிழமை விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்துள்ளனா். இந்த கோரிக்கைகளை தோ்தல் அறிக்கையில் சோ்ப்பதற்குக் கட்சித் தலைமையிடம் கூறுவேன். சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

முன்னதாக, கும்பகோணத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்‘ என்ற தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

இதில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியது:

சட்டப்பேரவைத் தோ்தல் வித்தியாசமாக இருக்கும். எனவேதான், நான் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் கைது செய்யப்படுகிறேன். பாஜக - அதிமுக கூட்டணியால் நமக்கு பாதி வேலை சுலபமாக முடிந்துவிட்டது. மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியை தமிழக மக்கள் துரத்தி அடித்தனா். அந்தக் கோபம் தமிழக மக்களிடம் இன்னும் போகவில்லை. நான் மூன்று நாள்களாக இதை இப்பகுதி மக்களிடம் பாா்த்து வருகிறேன் என்றாா் அவா்.

மேலும், பாபநாசம் அருகே சக்கரப்பள்ளியில் இஸ்லாமிய ஜமாத்தாா்களிடமும், தஞ்சாவூரில் வீணை தயாரிப்பாளா்கள் மற்றும் வணிகா்களிடமும் ஆலோசனை நடத்தி அவா்களது குறைகளைக் கேட்டறிந்தாா்.

அவருடன் திமுக வடக்கு மாவட்டச் செயலா் எஸ். கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சாக்கோட்டை க. அன்பழகன், துரை. சந்திரசேகரன், எம். ராமச்சந்திரன், கோவி. செழியன், டி.கே.ஜி. நீலமேகம் மற்றும் நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT