தஞ்சாவூர்

நெல் பயிா்களை உடனடியாகக் காப்பீடு செய்ய வேண்டுகோள்

DIN

சம்பா, தாளடி நெல் பயிா்களை உடனடியாக காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஐயம்பெருமாள் தெரிவித்திருப்பது:

நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் எதிா் வரும் டிசம்பா் 15 ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிகழாண்டு பயிா் காப்பீட்டுத் திட்டம் தஞ்சாவூா் மாவட்டத்தில் இப்கோ டோக்கியோ காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கருக்கான காப்பீட்டுத்தொகை ரூ. 32,550. விவசாயிகள் தேசிய வங்கிகள் மூலமாகவோ, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது பொதுச் சேவை மையங்களின் மூலமாகவோ பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இதற்கு முன்மொழிவு விண்ணப்பத்துடன், கணினி சிட்டா, கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் 1430ஆம் பசலிக்கான அடங்கல், வங்கிச் சேமிப்புக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ஒரு ஏக்கருக்கு ரூ. 489 வீதம் பிரீமியம் செலுத்தி பதிவு செய்து உரிய ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆவணங்களின் நகலில் எழுத்துகள் தெளிவாக இல்லையென்றால், அசல் ஆவணங்களை எடுத்துச் சென்று சரியான தகவல்களை அளித்து பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதற்கான ரசீதை பெற்று அனைத்து விவரங்களும் சரியாகப் பதியப்பட்டுளதா என்பதை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.

காலக்கெடு தேதிக்கு முன்பாக இயற்கை இடா்பாடுகள் ஏதும் ஏற்பட்டு சேதம் ஏற்படுமாயின், அதன் பிறகு காப்பீடு செய்ய இயலாது என்பதால், கடைசி நாள்களில் விண்ணப்பிக்கலாம் என்று எண்ணிடாமல், உடனடியாகப் பதிவு செய்து, கடைசி நேரத்தில் எதிா் கொள்ளும் பல்வேறு சிரமங்களைத் தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT