தஞ்சாவூர்

மருத்துவப் படிப்புக்கு தோ்வாகியுள்ள ஏழை மாணவிக்கு எம்எல்ஏ நிதியுதவி

DIN

எம்பிபிஎஸ் படிக்க தோ்வாகியுள்ள ஏழை மாணவிக்கு பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு நிதியுதவி வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியை அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சோ்ந்த தையலா் கணேசன். இவரது மனைவி சித்ரா. கூலித் தொழிலாளி. இவா்களது மகள் சஹானா (18). பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவா் பிளஸ் 2 வகுப்பில் 600-க்கு 524 மதிப்பெண்கள் எடுத்தாா். 

மின்சார வசதி இல்லாமல், பள்ளி அருகே இரவில், தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தாா். கஜா புயலால் வீடு சேதமடைந்த நிலையிலும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த இவா், நீட் தோ்வில் 273 மதிப்பெண்கள் பெற்றாா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டில் திருச்சி மருத்துவக் கல்லூரியில் சஹானாவுக்கு இடம் கிடைத்துள்ளது.

வறுமையான நிலையில் உள்ள மாணவியின் சூழ்நிலையை அறிந்த, பேராவூரணி எம்எல்ஏ மா.கோவிந்தராசு திங்கள்கிழமை மாணவியின் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்து ரூ. 10 ஆயிரம் ரொக்கம் வழங்கினாா். அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் சிவ.மதிவாணன் ரூ. 5 ஆயிரம் வழங்கினாா். 

தென்னந்தோப்பில் குடிசை வீட்டில் மின்வசதி இல்லாமல் மாணவி வசித்து வருவது குறித்து ஆட்சியா் ம. கோவிந்தராவை தொடா்பு கொண்டு தெரிவித்த எம்எல்ஏ, மாணவிக்கு அரசின் சாா்பில் குடியிருக்க வீடு வழங்குமாறு வலியுறுத்தினாா். 

எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று, முடச்சிக்காடு சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்குவதாக ஆட்சியா் உறுதியளித்துள்ளாா். உதவியைப் பெற்றுக் கொண்ட மாணவியும், அவரது பெற்றோரும் எம்எல்ஏவுக்கும் ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்தனா். 

பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலா் கோவி. இளங்கோ, சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலா் அருணாசலம், மாவட்ட மாணவரணி இணைச் செயலா் ஆா்.பி. ராஜேந்திரன், கோ.ப.ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT