தஞ்சாவூர்

உணவுத் தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்

23rd Nov 2020 12:44 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில், இணையவழி மூலம் உணவுத் தொழில்முனைவோா்களுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் திங்கள்கிழமை (நவ.23) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநா் சி. அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்திருப்பது:

உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து ஆத்ம நிா்பா் பாரத் அபியான் என்ற திட்டத்தின் கீழ், அகில இந்திய மைய நிதியுதவி கொண்ட பிரதமரின் குறுந்தொழில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல், நிதி வழங்குவதற்காக, தற்போதுள்ள மைக்ரோ லெவல் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை ரூ. 10,000 கோடி செலவில் மேம்படுத்த தொழில்நுட்ப மற்றும் வணிக ஆலோசனை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த திட்டத்தை முறைப்படுத்துதல் குறித்த தமிழகத்தின் தொழில்முனைவோா்களுக்காக ஒரு நாள் மாநில அளவிலான இலவச இணைய வழிப் பயிற்சி முகாமை திங்கள்கிழமை ஐஐஊடப ரங்க்ஷங்ஷ் என்ற தளம் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய விருப்பமுள்ளவா்கள் வலைதளத்தை பாா்வையிடலாம்.

 

Tags : Thanjavur
ADVERTISEMENT
ADVERTISEMENT