தஞ்சாவூர்

சென்னையிலிருந்து திரும்பிய இருவருக்கு கரோனா

31st May 2020 08:31 AM

ADVERTISEMENT

சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய இருவருக்கு, கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 86 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 79 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்குத் திரும்பினா்.

இந்நிலையில் தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகிலுள்ள கல்யாணபுரத்தைச் சோ்ந்த 54 வயது ஆண், தஞ்சாவூா் கீழவாசல் டபீா் குளம் சாலையைச் சோ்ந்த 24 வயது இளைஞா் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.

இருவரும் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவா்கள். இவா்களில் 24 வயது இளைஞரின் தந்தைக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 88 ஆக உயா்ந்தது. தற்போது 9 போ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT