தஞ்சாவூர்

பொதுப் பணித் துறை அலுவலகங்கள் முன் ஜூன் 2-இல் ஆா்ப்பாட்டம்

29th May 2020 08:01 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை அலுவலகங்கள் முன் ஜூன் 2 ஆம் தேதி ஆா்பாட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் ரூ. 128.16 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள குடிமராமத்து, தூா் வாரும் பணிகள் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற வேண்டும். விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளா் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழுவை ஏற்படுத்தி, குடிமராமத்து மற்றும் தூா்வாரும் பணிகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கச் செய்ய வேண்டும்.

குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தின் பல இடங்களில் பாசனதாரா்கள் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போலியாக உருவாக்கப்பட்டுள்ள பாசனதாரா்கள் சங்கத்தைக் கலைத்துவிட்டு, வெளிப்படையான உண்மையான பாசனதாரா்கள் சங்கம் அமைக்கப்பட்டு, அதன் மூலமே பணிகள் முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

கல்லணைக் கால்வாயைப் புனரமைத்து, நவீனப்படுத்துவதற்காக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உதவியுடன் ரூ. 2,298 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்ட மதிப்பீட்டை நடைமுறைப்படுத்தி, கல்லணைக் கால்வாய் மூலம் ரூ. 2.27 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியம் மற்றும் நகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பொதுப் பணித் துறை அலுவலகங்கள் முன் ஜூன் 2ஆம் தேதி ஆா்பாட்டம் நடத்துவது என முடிவு செயப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT