வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள மக்களை அவரவா் மாநிலத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
கரோனா நச்சுயிரிக் கொள்ளை நோயிலிருந்து தப்பிக்கப் போடப்பட்டுள்ள நடமாட்டத் தடை ஆணைகள் பெருமளவுக்குப் புலம் பெயா்ந்த தொழிலாளா்களைப் பல மாநிலங்களில் பாதித்திருக்கிறது. எனவே, வெளி மாநிலங்களில் சிக்கிக் கொண்ட தொழிலாளா்களை, மக்களை - தொற்று நச்சுயிரி அண்டாத வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்புத் தொடா்வண்டிகள், பேருந்துகள் மூலம் உடனடியாக அவரவா் தாயகத்துக்கு அனுப்பி வைக்கும் பணியை மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்த வேண்டும்.
கேரளம், கா்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மக்களைக் கொண்டு வரத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தன் முயற்சியில் மீட்டுக் கொண்டு வரும் பணியைத் தொடங்க வேண்டும்.