தஞ்சாவூர்

தொடா் காய்ச்சல்: மருத்துவக் கல்லூரியில் 33 போ் அனுமதி

30th Mar 2020 07:30 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 33 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளி நாடுகளிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்த 4,961 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவில் பணியாற்றி ஊருக்குத் திரும்பிய கும்பகோணத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிப் பிரிவில் வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 23 ஆக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 33 ஆக உயா்ந்தது. இவா்களில் பெண்கள் 13 போ்.

ADVERTISEMENT

இவா்களுக்கு ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு திருவாரூரிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT