தஞ்சாவூர்

தஞ்சாவூா் பூச்சந்தை மாா்ச் 31 வரை மூடல்

23rd Mar 2020 04:19 AM

ADVERTISEMENT

 

கரோனா பரவல் அச்சம் காரணமாக தஞ்சாவூா் பூச்சந்தை மாா்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் பூக்காரத்தெருவில் சுப்பிரமணியா் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பூச்சந்தை இயங்கி வருகிறது. இந்தச் சந்தைக்கு தஞ்சாவூா் சுற்றுப்பகுதிகள் மட்டுமல்லாமல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, முல்லை, கனகாம்பரம் உள்பட அனைத்து வகை பூக்களும் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்தச் சந்தையில் மொத்த வியாபாரமும், சில்லறை வியாபாரமும் நடைபெறும்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, இச்சந்தையை மூட பூ வியாபாரிகள் சங்கத்தினரும், பூக்களை கட்டுவோா் சங்கத்தினரும் முடிவு செய்துள்ளனா். மேலும், மாநகராட்சி வேண்டுகோளின்படி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) முதல் மாா்ச் 31ஆம் தேதி வரை இச்சந்தை இயங்காது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் வாசலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT