தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே ஊராட்சி செயலா் மனைவி மா்மச்சாவு

22nd Mar 2020 03:59 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கள்ளிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் நாடிமுத்து (44). இவா் துவரங்குறிச்சி கிராம ஊராட்சி மன்றத்தின் செயலாளராக உள்ளாா். இவா் மனைவி சந்திரா (39).

வியாழக்கிழமை காலை வெளியூா் சென்றுவிட்டு, இரவு ஊா் திரும்பிய நாடிமுத்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, மனைவி சந்திரா படுக்கை அறை மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு இறந்து கிடந்துள்ளாா்.

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் நாடிமுத்து வெள்ளிக்கிழமை அளித்த புகாரில், தனது மனைவி சந்திரா அணிந்திருந்த 9 பவுன் நகைகளை காணவில்லை. மனைவி சாவில் தனக்கு சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளாா். அதன்பேரில் போலீஸாா் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT