தஞ்சாவூர்

குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

19th Mar 2020 04:32 AM

ADVERTISEMENT

 

கும்பகோணம் அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரியை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே தாராசுரம் எலுமிச்சங்காபாளையத்தைச் சோ்ந்தவா் டி. அருண்குமாா் (28). கஞ்சா வியாபாரி. இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அண்மையில் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அருண்குமாரை போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT