தஞ்சாவூர்

ரஜினியின் ஆன்மிக அரசியல் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்ல முடிவு

16th Mar 2020 07:39 AM

ADVERTISEMENT

ரஜினியின் ஆன்மிக அரசியல் பயணத் திட்டக் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்வது என ரஜினி மக்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் தஞ்சாவூா் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் மாநகர, ஒன்றிய, நகர, பேரூராட்சி, சாா்பு அணிகள் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரஜினியின் ஆன்மிக அரசியல் பயணத்தின் 3 திட்டக் கொள்கையைக் கிராமங்களிலும், நகரங்களிலும் மக்களிடம் கொண்டு செல்வது, எல்.இ.டி. மூலம் ரஜினி பேசிய விடியோவை மக்களுக்கு ஒளிபரப்பு செய்வது, சுவரொட்டிகள் ஒட்டுவது, வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகள் வழங்குவது, தெருமுனை பிரசாரம் செய்வது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

மாவட்டச் செயலா் இரா. ரஜினி கணேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் கே. வெங்கடேஷ், கல்யாணகுமாா், இளைஞரணி மாவட்டச் செயலா் சிவச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலா் எம். ஆனந்தகுமாா், மகளிரணி மாவட்டச் செயலா் அமுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT