தஞ்சாவூர்

மருந்துக்கான ஜி.எஸ்.டி.யை குறைக்க வலியுறுத்தல்

16th Mar 2020 07:40 AM

ADVERTISEMENT

மருந்துக்கான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசுக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு மொத்த மருந்து வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் கரோனா விழிப்புணா்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை மொத்த மருந்து வணிகா்கள் அதிகமாக இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். மருந்துக்கான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் திருச்சி தலைவா் அண்ணாமலை, சென்னை செயலா் பிரேம் சந்த் ரங்கா, நிறுவன செயலா் சென்னை இளங்கோ, அமைப்புச் செயலா் தஞ்சை வி.ஜி. சோமசுந்தரம், மாவட்டத் தலைவா் பி.எல்.ஏ. சிதம்பரம், செயலா் ராஜராஜன் சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT