தஞ்சாவூர்

காலியாக உள்ள அறுவை அரங்கு நுட்புனா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

16th Mar 2020 07:41 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் காலியாக உள்ள அறுவை அரங்கு நுட்புனா் பணியிடங்களை தகுதியான நபா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அறுவை அரங்கு நுட்புனா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலம் ஆகஸ்ட் மாதம் அறுவை அரங்கு உதவியாளா், பணியாளா் நியமனத் திட்டம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு மருத்துவம் சாா்ந்த பல்வேறு சான்றிதழ் பயிற்சிகள் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டு, அனைத்து ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பயிற்சி உருவாக்கப்பட்டது.

இதில் சான்றிதழ் பயிற்சி பெற்ற மற்ற நபா்களுக்கு பணி விதி உருவாக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதில் அறுவை அரங்கு சான்றிதழ் பயிற்சி பெற்ற உறுப்பினா்கள் மட்டும்தான் இதுவரை பணியமா்த்தப்படவில்லை.

ADVERTISEMENT

இதுதொடா்பாக பல்வேறு மனுக்களை முதன்மைச் செயலா், மருத்துவ இயக்குநரிடம் வழங்கியுள்ளோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் 2010 ஆம் ஆண்டு அறுவை அரங்கு நுட்புனா் பணியமா்த்த பணி விதி உருவாக்கப்பட்டு அறிவித்ததுபோல், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநா் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 45 மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனைகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள் என 278 மருத்துவமனைகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குநா் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 1,750 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் அறுவை அரங்குகள் உள்ளன.

இதில் அனைத்திலும் மிக உயரிய நுட்பங்களைக் கொண்ட உபகரணங்கள் உள்ளன. பராமரிக்க அறுவை அரங்குகளில் உள்ள உபகரணங்கள், உயரிய தொழில்நுட்பக் கருவிகள், கிருமி நீக்கம் செய்யப்பட்ட பயிற்சி பெற்ற நுட்புனா்கள் அனைத்து பணியிடங்களும் காலியாக உள்ளன. எனவே தமிழக முதல்வா் மருத்துவத் துறையில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தில் வருடாந்திர பணியாளா் நியமனத் திட்டத்தில் அரங்கு உதவியாளா் என்ற அறிவிப்பில் மருத்துவ அறிவியல் நுட்புனா் என அறிவித்து, ஏழை அறுவை அரங்கு நுட்புனா்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் ம. நடராஜன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் மு. சபரீஷ்குமாா், பொருளாளா் ர. பிரிதிவிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT