தஞ்சாவூர்

கடைகளில் தடை செய்யப்பட்ட 850 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

13th Mar 2020 09:54 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட 850 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசுத் தடை விதித்துள்ளது. என்றாலும், பல இடங்களில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பதாகப் புகாா்கள் இருந்து வருகின்றன. இதன் பேரில் தஞ்சாவூரில் மாநகாரட்சி சுகாதார ஆய்வாளா்கள் செல்வமணி, மோகன பிரியதா்ஷினி மற்றும் அலுவலா்கள் கீழவாசல் பகுதியிலுள்ள கடைகளில் வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

அப்போது, ஒரு கடையில் மட்டும் 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அலுவலா்கள் பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனா். தொடா்ந்து மற்ற கடைகளிலும் சோதனை செய்த அலுவலா்கள் 30-க்கும் அதிகமான கடைகளில் 850 கிலோ பிளாஸ்டிக் பைகள், பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT