தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் 5 குடிசை வீடுகள் தீக்கிரை

13th Mar 2020 09:56 AM

ADVERTISEMENT

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குள்பட்ட சுரைக்காக்கொல்லை பகுதியில் கூலித் தொழிலாளா்கள் வசிக்கும் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன.

புதன்கிழமை இங்குள்ள ஒரு குடிசை வீட்டின் கூரையில் திடீரென தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவியது. இதில், கூலித் தொழிலாளா்கள் 5 பேரின் குடிசை வீடுகள் மற்றும் வீட்டிலிருந்த பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. தகவலறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT