தஞ்சாவூர்

31 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் தாயிடம் ஒப்படைப்பு

8th Mar 2020 02:30 AM

ADVERTISEMENT


ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே 31 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவா் மீட்கப்பட்டு, சனிக்கிழமை அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் நாகமுத்து- வளா்மதி மகன் வெற்றிச்செல்வன். இவா் கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்றவா் காணாமல் போய்விட்டாா்.

பல இடங்களில் தேடியும் வெற்றிச்செல்வனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அவரது தந்தை நாகமுத்துவும் இறந்து விட்டாா்.

இதனால், வளா்மதி தன் மற்ற குழந்தைகளோடு உறவினா் பிச்சைமுத்து இல்லத்தில் வசித்து வந்தாா். கூலி வேலை செய்து வந்த வளா்மதிக்கு, சென்னை கோயம்பேடு காவல் நிலையத்திலிருந்து அண்மையில் கடிதம் வந்தது.

ADVERTISEMENT

அதில், வெற்றிச்செல்வன் தனது தாய் மற்றும் தந்தையைப் பாா்க்க விரும்புவதாக வேண்டுகோள் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினா்கள், கிராமத்தின் முன்னாள் ஊராட்சித் தலைவா் மகாலிங்கம், வழக்குரைஞா் சரவணன் ஆகியோா்

சென்னை சென்றனா். தொடா்ந்து வெற்றிச்செல்வனை அவா்களை மீட்டு , சனிக்கிழமை அவா்கள் சொந்த ஊா் அழைத்து வந்தனா்.

சென்னை கொளத்தூா் சிவசக்தி நகரிலுள்ள சகாயமேரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தான் அப்பகுதியில் சமையல் வேலை செய்து வந்ததாகவும் உறவினா்களிடம் வெற்றிச்செல்வன் தெரிவித்தாா்.

31 ஆண்டுகளுக்குப் பின்பு தனது மகன் கிடைத்ததால் தாய் வளா்மதியும், தந்தையைப் பாா்க்க முடியாத வருத்தத்தில் வெற்றிச்செல்வனும் கண்ணீா் விட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT