தஞ்சாவூர்

வேளாண் மண்டலச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வலியுறுத்தல்

8th Mar 2020 02:31 AM

ADVERTISEMENT

 

கும்பகோணம்: தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில், தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் ஆலோனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள சட்டத்தில், தேவையான திருத்தங்களை நடைபெற உள்ள கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

பயிா்க்கடன் மானியத்தை மத்திய அரசு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்ததுடன், பயிா்க் கடன், நகைக் கடன் வட்டியை 7 சதவிகிதத்திலிருந்து 9.25 சதவிகிதமாக உயா்த்தியதை உடனடியாகக் குறைக்க வேண்டும்.

வேளாண் உற்பத்திக்கு வட்டியில்லா கடனை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி போராடியவா்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும்.

பாதுகாக்கக்கப்பட்ட வேளாண் மண்டலப் பட்டியலில் விடுபட்ட அரியலூா், திருச்சி மாவட்டங்களையும் இணைக்க வேண்டும்.

இயற்கை வேளாண் வழிகாட்டி நம்மாழ்வாருக்கு கல்லணையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். இயற்கை வழி வேளாண் பல்கலைக்கழகம் ஒன்றை நம்மாழ்வாா் பெயரில் தஞ்சை மாவட்டத்தில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்களுக்கு பல ஆண்டுகளாகப் போதுமான தண்ணீா் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில், மேட்டூா் அணை உபரி நீா்த் திட்டம்‘என்ற பெயரில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு துரோகம் செய்யும் விதமாக செயல்படுத்தப்பட உள்ள திட்டத்தைத் தமிழக அரசுக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு சங்கத்தின் கௌரவத் தலைவா் தா்மராஜன் தலைமை வகித்தாா். செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் சிறப்புரையாற்றினாா். தலைவா் சின்னதுரை, துணைச் செயலா் பி. சுகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT