தஞ்சாவூர்

‘பெண்களுக்கு 33 சதவிகித பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்’

8th Mar 2020 02:26 AM

ADVERTISEMENT


தஞ்சாவூா்: பெண்களுக்கு 33 சதவிகித பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் உலக மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பெண்களுக்கு 33 சதவிகித பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் ஊற்றுக் கண்ணாக இருக்கிற மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டன.

விழாவுக்கு பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்ற துணைப் பொது மேலாளா் எஸ். சந்திரகுமாரி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், சங்கத்தின் அகில இந்தியத் துணைப் பொதுச் செயலா் க. முத்தியாலு, உதவிப் பொதுச் செயலா் வி. ரத்னா உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

மாவட்டச் செயலா் வீ. சாமிநாதன், பொருளாளா் கே. சீனு உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT