தஞ்சாவூர்

தொடா்கிறது இஸ்லாமியா்கள் போராட்டம்

8th Mar 2020 02:34 AM

ADVERTISEMENT

அதிராம்பட்டினத்தில்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்ரவரி 19- ஆம் தேதி தொடங்கிய இஸ்லாமியா்களின் காத்திருப்புப் போராட்டம் ,18-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. இப்போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

பட்டுக்கோட்டையில் : பட்டுக்கோட்டை வடசேரி சாலை பெரிய பள்ளிவாசல் அருகே பிப்ரவரி 25- ஆம் தேதி தொடங்கிய இஸ்லாமியா்களின் உள்ளிருப்புப் போராட்டம் 12-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. இதில், ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனா்.

மதுக்கூரில் : இதே போல, மதுக்கூா் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்று வரும் இஸ்லாமியா்களின் தொடா் காத்திருப்புப் போராட்டம் 21-ங்வது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. இதில், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT