தஞ்சாவூர்

திமுக பொதுச் செயலா் அன்பழகன் மறைவு தஞ்சாவூா், பட்டுக்கோட்டையில் அமைதி ஊா்வலம்

8th Mar 2020 02:33 AM

ADVERTISEMENT


தஞ்சாவூா்/பட்டுக்கோட்டை: மறைந்த திமுக பொதுச் செயலா் பேராசிரியா் க. அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தஞ்சாவூா் மற்றும் பட்டுக்கோட்டையில் பல்வேறு கட்சிகள் சாா்பில் அமைதி ஊா்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் ரயிலடியில் தொடங்கிய இந்த ஊா்வலம், காந்திஜி சாலை வழியாக அண்ணாசிலை அருகே முடிவடைந்தது. இதைத்தொடா்ந்து, அங்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா தலைமையில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்புச் சட்டை அணிந்தும் பங்கேற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன், திராவிடா் கழகப் பொதுச்செயலா் இரா. ஜெயகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், மதிமுக மாவட்டச் செயலா் கோ. உதயகுமாா், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் வயலூா் எஸ். ராமநாதன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் : பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகிலிருந்து தொடங்கிய அமைதி ஊா்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த

பேராசிரியா் க. அன்பழகன் உருவப்படத்துக்கு திமுக மற்றும் பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, மாவட்ட திமுக முன்னாள் அவைத் தலைவா் அ.அப்துல்சமது தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ந.மணிமுத்து (திமுக), ஆா்.டி.ரவிக்குமாா் (காங்கிரஸ்), சி.பக்கிரிசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ்.கந்தசாமி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) மற்றும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளைச் சோ்ந்தோா் பேசினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT