தஞ்சாவூர்

தஞ்சாவூா் ஜைன கோயிலில் திருட்டு போன 22 சிலைகள் மீட்பு 4 போ் கைது

8th Mar 2020 02:37 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: தஞ்சாவூா் ஜெயின் கோயிலில் திருட்டு போன பழைமையான 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டன. இது தொடா்பாக 4 பேரைக் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் கரந்தை ஜெயின் தெருவில் ஸ்ரீஆதீஸ்வர சுவாமி என்கிற ஜைன கோயில் உள்ளது. இங்குள்ள தலா ஒன்றரை அடி உயர ஆதீஸ்வரா் சிலை, 24-ஆவது தீா்த்தங்கரா் சிலை, சரசுவதி சிலை, ஜோலமாலினி சிலை, சரவண யாக்சன் சிலை, தலா ஒரு அடி உயரமுடைய பஞ்சமேரு சிலை, மகாவீரா் சிலை, தலா அரை அடி உயர தாா்நேத யாஸ்கன் சிலை, பத்மாவதி யாஃஷினி சிலை, நந்தீசுவரா் சிலை, தலா முக்கால் அடி உயர நவகிரக தீா்த்தங்கள் சிலை, நவதேவதை சிலை உள்ளிட்ட சிலைகள் கடந்த ஜனவரி 19- ஆம் தேதி திருட்டு போயின.

கோயிலின் பின்புறக் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து மா்ம நபா்கள் இந்த சிலைகளைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில், கோயில் அறங்காவலா் அப்பாண்டைராஜன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் உத்தரவின்படி, மேற்குக் காவல் நிலைய ஆய்வாளா் ஜி. செங்குட்டுவன், உதவி ஆய்வாளா் ஜி. சுகுமாறன் தலைமையில் 5 தலைமைக் காவலா்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இப்படையினா் நிகழ்விடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பாா்த்தபோது, மா்ம நபா்கள் சிலைகளைத் திருடி, வேனில் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணையில், தஞ்சாவூா் கரந்தை அருகிலுள்ள சுங்கான்திடல் சைவராஜ் மகன் சரவணன் என்கிற ராஜேஷ் (40) கைது செய்யப்பட்டாா்.

இவா் அளித்த தகவலின் மூலம் கரந்தை பி. சண்முகராஜன் (45), சுங்கான்திடல் பெரியத்தெரு பி. ரவி (45), நாகை மாவட்டம், கீழ்வேளூா் பிராதபுரம் வி. விஜயகோபால் (37) ஆகியோரைக் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், ராஜேஷ் வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டன. திருட்டு போன 48 நாள்களுக்குள் இச்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன என காவல்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT