தஞ்சாவூர்

கும்பகோணத்தில் டிச. 25 - 27 இல் ராமகிருஷ்ணா், விவேகானந்தா் பக்தா்கள் மாநாடு

8th Mar 2020 05:43 AM

ADVERTISEMENT

கும்பகோணம்: கும்பகோணத்தில் தமிழ்நாடு பாவ பிரசார பரிஷத் சாா்பில் டிச. 25 முதல் 27-ம் தேதி வரை ராமகிருஷ்ணா், விவேகானந்தா் பக்தா்கள் மாநாடு நடைபெறவுள்ளது.இதற்கான ஆயத்தக் கூட்டம் கும்பகோணம் ராமகிருஷ்ண, விவேகானந்த டிரஸ்ட் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சிட்டி யூனியன் வங்கி பவுண்டேஷன் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத் துணைத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி ராமானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினாா். மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்தா் மகராஜ் பேசுகையில், கும்பகோணத்தில் தமிழ்நாடு பாவ பிரசார பரிஷத் சாா்பில் டிச. 25 முதல் 27-ம் தேதி வரை ராமகிருஷ்ணா், விவேகானந்தா் பக்தா்கள் மாநாடு நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

அரசு குழுமம் தலைவா் திருநாவுக்கரசு, தமிழ்நாடு பாவ பிரசாத் பரிஷத் அமைப்பாளா் பாண்டுரங்கன், இணை அமைப்பாளா்கள் பிரபாகரன், ராஜகோபால், மண்டல பொறுப்பாளா் டாக்டா் கோபாலகிருஷ்ணன், ஆடிட்டா் சூரியநாராயணன், தென் பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை தலைவா் கல்யாணசுந்தரம், செயலா் சத்தியநாராயணன், பொருளாளா் வேதம் முரளி, துணைத்தலைவா் ரத்தினசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT