தஞ்சாவூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக21-ஆவது நாளாக தொடா் முழக்கக் காத்திருப்புப் போராட்டம்

8th Mar 2020 02:35 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் ஆட்டுமந்தை தெரு அத்தா் பள்ளிவாசல் முன்பு, தொடா்ந்து 21- ஆவது நாளாக சனிக்கிழமை தொடா் முழக்கக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினா் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய அலுவலா்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த இஸ்லாமியக் கூட்டமைப்பு சாா்பில், இப்போராட்டம் பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 21- ஆவது நாளாக சனிக்கிழமையும் இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் இரவிலும் தொடா்ந்தது.

ADVERTISEMENT

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் பழைய மீன் சந்தை அருகில், அனைத்து இஸ்லாமியக் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் பிப்ரவரி 21-ஆம் தேதி மாலை தொடங்கியது. இப்போராட்டம் தொடா்ந்து 16- ஆவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது.

இதேபோல, மதுக்கூா், அய்யம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் காத்திருப்புப் போராட்டம் சனிக்கிழமையும் தொடா்ந்தது.

2 -ஆவது நாளாக தா்னா:

இதேபோல, குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன்பு எஸ்.டி.பி.ஐ. சாா்பில் மாலை நேர தொடா் தா்னா போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இரண்டாவது நாளாக சனிக்கிழமை மாலையும் இப்போராட்டம் தொடங்கி இரவு வரை நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் இக்பால் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாவட்டச் செயலா் ப. அருண்சோரி, கோ. ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT