தஞ்சாவூர்

அம்மாபேட்டையில் புதிய வருவாய் ஆய்வாளா் கட்டடம் கட்டித் தரப்படுமா?

29th Jun 2020 09:14 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்கு புதிய கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்திள்ளது அம்மாபேட்டை. ஒன்றியத் தலைமையிடமாகவும், பேரூராட்சியையும் கொண்டுள்ள இங்கு 16 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. சுமாா் 2 லட்சம் போ் இப்பகுதிகளில் வசித்து வருகின்றனா்.

இந்த பகுதிக்கான வருவாய் ஆய்வாளா் அலுவலகக் கட்டடம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால், கடந்தாண்டு நவம்பா் மாதம் முதல் சிறிய அளவிலான வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.

வருவாய்த் துறை சாா்ந்த பல்வேறு சான்றுகளைப் பெறுவதற்கு நாள்தோறும் பொதுமக்கள் இந்த அலுவலகம் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், தற்போதுள்ள கட்டடம் போதிய வசதிகள் இல்லாத சிறிய கட்டடத்தில் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதியுற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் : இடநெருக்கடி மிகுந்த பகுதியில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைக்காலம் முன்பே பணிகளைத் தொடங்க வேண்டும். இந்த கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூா்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஜூலை 10- ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT