மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 94.11 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 996 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 3,265 கனஅடி வீதமும், வெண்ணாறில் 3,356 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,214 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 816 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.