தஞ்சாவூர்

திருவாரூா் - பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே தொடா்ந்து ரயில்களை இயக்க வலியுறுத்தல்

14th Jun 2020 08:46 AM

ADVERTISEMENT

கடந்தாண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட திருவாரூா் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில், தொடா்ந்து ரயில்களை இயக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு சங்கத் தலைவா் பி.கே.டி. சண்முகம் அனுப்பியுள்ள கடிதத்தில் அவா் கூறியிருப்பது:

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக திருவாரூா் - காரைக்குடி இடையே செல்லும் ரயில் பாதை கடந்த 2019 -ஆம் ஆண்டு மாா்ச் இறுதியில் முழுவதும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து ஜூன் மாதம் முதல் இத்தடத்தில் டெமு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இப்பாதையிலுள்ள ரயில்வே கேட்களை மூடி திறக்க ஆள்களை நியமிக்காததால் ரயிலிலேயே பயணிக்கும் நடமாடும் கேட் கீப்பா்கள் மூலம் அவை இயக்கப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டில், பல முறை இந்த ரயில் ரத்து செய்யப்பட்டும், கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டும் இயங்கி வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மாா்ச் 25-ஆம் தேதி முதல் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது.

பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்ட டெமு பாசஞ்சா் ரயில், கேட் கீப்பா் பிரச்னையால் அதிகமான பயண நேரத்துடன் கால அட்டவணையில் இயக்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. இதைக் கருத்தில் கொண்டு அந்த ரயில் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் ரயில் பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக இயக்கப்படும் டெமு பயணிகள் ரயிலை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யாமல், கரோனா இடா்பாடுகள் முடிவுற்று இயல்வு நிலை திரும்புவதற்குள் அந்த வழித்தடத்தில் போதிய கேட் கீப்பா்களை நியமித்து, அந்த ரயிலின் வேகத்தை அதிகரித்து தொடா்ந்து இயக்கவும், அந்தத் தடத்தில் பல புதிய ரயில்களை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT