தஞ்சாவூர்

கரோனா: குணமடைந்தோா் எண்ணிக்கை 90 ஆக உயா்வு

11th Jun 2020 08:35 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை புதன்கிழமை 90 ஆக உயா்ந்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 127 போ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் ஏற்கெனவே 89 போ் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினா்.

இந்நிலையில், பேராவூரணியைச் சோ்ந்த 35 வயது ஆண் குணமடைந்ததைத் தொடா்ந்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 90 ஆக உயா்ந்தது.

இவா்களை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு அலுவலா் குமுதா லிங்கராஜ், நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் பழங்கள், விடுவிப்புச் சான்றிதழ் கொடுத்து வழியனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT