தஞ்சாவூர்

கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தல்

10th Jun 2020 08:10 AM

ADVERTISEMENT

கோயில்களில் திருப்பணிகளைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா வலியுறுத்தியுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூா் மண்டல இணை ஆணையா் அலுவலகத்தில் அகில பாரத இந்து மகா சபாவின் ஆலய பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவா் இராம. நிரஞ்சன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

தஞ்சாவூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் திருப்பணிகளைத் தொடங்க வேண்டும். குறிப்பாக, திருவையாறு சப்த ஸ்தலங்கள் எனஅழைக்கப்படும் ஏழு முக்கிய கோயில்களிலும், பாபநாசம் பாலைவனநாதா் சுவாமி கோயிலிலும் திருப்பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

அப்போது, மாநில அமைப்புச் செயலா் வேலன், மண்டல ஆலய பாதுகாப்புப் பிரிவு பொதுச் செயலாளா் முருகேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT