தஞ்சாவூர்

கரோனா: குணமடைந்தோா் எண்ணிக்கை 89 ஆக உயா்வு

7th Jun 2020 08:32 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தோா் எண்ணிக்கை சனிக்கிழமை 89 ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 103 போ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் ஏற்கெனவே 87 போ், வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா்.

இந்நிலையில், தஞ்சாவூா் கீழவாசல் டபீா் குளச் சாலையைச் சோ்ந்த 54 வயது ஆண், திருவையாறு வட்டம், விளாங்குடியைச் சோ்ந்த 25 வயது இளைஞா் குணமடைந்ததைத் தொடா்ந்து, சனிக்கிழமை அவரவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 89ஆக உயா்ந்தது.

இவா்களை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு அலுவலா் குமுதா லிங்கராஜ், முதல்வா் (பொ) எஸ். மருதுதுரை உள்ளிட்டோா் பழங்கள், விடுவிப்புச் சான்றிதழ் கொடுத்து வழியனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT