தஞ்சாவூர்

அயோத்தி ராமா் கோயில் பூமிபூஜைக்கு கும்பகோணத்திலிருந்து புனிதநீா்

31st Jul 2020 08:14 AM

ADVERTISEMENT

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜைக்கு கும்பகோணம் மகாமகம் குளத்தில் இருந்து புனிதநீா் எடுத்து செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் நடைபெறவுள்ளது.

இதற்காக கும்பகோணம் மகாமகம் குளத்தில் இருந்து 5 குடங்களில் புனிதநீா் எடுத்து செல்லும் நிகழ்ச்சி அனைத்து இந்து கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காசி விஸ்வநாதா் கோயில் அா்ச்சகா்கள் மகாமகம் தீா்த்தவாரி கட்டத்தில் இருந்து 5 குடங்களில் புனித நீா் எடுத்து கொடுத்து பூஜைகளை செய்தனா்.

ADVERTISEMENT

இதில் பாஜக மாவட்டத் துணைத் தலைவா் சோழராஜன், இந்து மக்கள் கட்சி இளைஞரணி மாநிலப் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி, சிவசேனா மாவட்டச் செயலா் குட்டி சிவக்குமாா், விஸ்வ ஹிந்து பரிஷத் கும்பகோணம் நகரத் தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தப் புனித நீரை தனி வாகனம் மூலம் அயோத்திக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT