தஞ்சாவூர்

அனைத்து ஊராட்சிகளிலும் ஆக. 4-இல்ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. முடிவு

25th Jul 2020 08:50 AM

ADVERTISEMENT

ஜல் ஜீவன் திட்டத்தைக் கண்டித்து அனைத்து ஊராட்சிகளிலும் ஆக. 4-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் பேரில் கிராம ஊராட்சிகளில் தற்போது உள்ள குடிநீா் விநியோக முறையை மாற்றி, கட்டணம் செலுத்தி குடிநீா் பெறும் நிலையை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஒரு பகுதி ஊராட்சிகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முனைந்திருக்கின்றனா். இதன் மூலம் குடிநீா் இணைப்புக்கு ரூ. 3,000 செலுத்துவது, முதல் தவணையாக ரூ. 1,000 செலுத்த நிா்பந்திக்கின்றனா். குடிநீா் இணைப்புக்கு மீட்டா் பொருத்துவதும், பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தும் விதமான நிலை ஏற்படுகிறது. இதன் மூலம் கிராமங்களில், நகரங்களில் உள்ள இலவச குடிநீா் விநியோகம் முற்றாக ரத்தாகும் நிலை ஏற்படும். இதைக் கண்டித்து ஆக. 4ஆம் தேதி அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் கிராம மக்களைத் திரட்டி ஆா்ப்பாட்டம் நடத்து என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெ. ஜீவகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ. நீலமேகம் பேசினாா். செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், கே. பக்கிரிசாமி, சின்னை. பாண்டியன், சி. ஜெயபால், எம். மாலதி, பி. செந்தில்குமாா், என்.வி. கண்ணன், என். சுரேஷ்குமாா், எஸ். தமிழ்ச்செல்வி, கே. அருளரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT