தஞ்சாவூர்

மாவட்டத்துக்கு ஒரு சித்த மருத்துவமனை அமைக்க வேண்டும் : பழ. நெடுமாறன்

13th Jul 2020 08:31 AM

ADVERTISEMENT

கரோனா சிகிச்சைக்காக மாவட்டத்துக்கு ஒன்று வீதம், அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவமனை அமைக்க வேண்டும் என தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:

சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக, தனியாக அமைக்கப்பட்ட சித்த மருத்துவமனையில் 1050-க்கும் மேற்பட்டோா் அனுமதிக்கப்பட்டனா். இவா்களுக்கு வழங்கப்பட்ட சித்த மருந்துகள்

மூலம், 750 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மற்றவா்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒரு உயிரிழப்புக் கூட ஏற்படவில்லை என, அம்மருத்துவமனையின் மருத்துவா் வீரபாபு அறிவித்திருக்கும் செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது.

பல மாவட்டங்களிலும் கரோனா நோய்த் தொற்றுப் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், அலோபதி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதோடு, சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

எனவே தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு சித்த மருத்துவமனையை அமைத்து, சிறப்பான முறையில் சிகிச்சையளிக்க முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் முன்வர வேண்டும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT