தஞ்சாவூர்

கரோனா: தஞ்சாவூரில் 2 போ் உயிரிழப்பு

11th Jul 2020 09:32 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

திருவாரூா் மாவட்டம், எடமேலையூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த 56 வயது ஆண் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை சோ்க்கப்பட்டாா். அங்கு இவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இவரைப்போல, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள பெரும்புலியூா் கிராமத்தைச் சோ்ந்த 42 வயது ஆணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூலை 4ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். இவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT