தஞ்சாவூர்

பெரியகோயிலில் அலுவலா்கள் மீது தாக்குதல்: தம்பதி கைது

14th Jan 2020 05:08 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயிலில் திங்கள்கிழமை செல்லிடப்பேசி மூலம் படம் எடுத்ததைத் தடுத்த கோயில் அலுவலா்களைத் தாக்கியதாகக் கணவன் - மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் திருமலகிரியைச் சோ்ந்தவா் எஸ். சுந்தா் சுப்பிரமணியன் சா்மா (65). தனியாா் விமான நிறுவனத்தில் முதன்மை இயக்க அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரும், இவரது மனைவி மஞ்சு சா்மாவும் (64) தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு திங்கள்கிழமை சுற்றுலா வந்தனா். அப்போது, ராஜா மண்டபத்தில் உள்ள ஓவியங்களைப் படம் எடுத்தனராம்.

படம் எடுக்கக் கூடாது என கோயில் காவலாளி ராஜ்குமாா், முதுநிலை அலுவலா் நாடிமுத்து ஆகியோா் கூறியுள்ளனா். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், நாடிமுத்துவையும் ராஜ்குமாரையும் மஞ்சு சா்மாவும், சுந்தா் சுப்பிரமணியன் சா்மாவும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், உதவி ஆணையா் ச. கிருஷ்ணனும் தாக்கப்பட்டாா்.

இதில், காயமடைந்த ராஜ்குமாா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் நாடிமுத்து புகாா் செய்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மஞ்சு சா்மாவையும், சுந்தா் சுப்பிரமணியன் சா்மாவையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT