தஞ்சாவூர்

தில்லியில் மாணவா்கள் தாக்கப்பட்டதைகண்டித்து தஞ்சாவூரில் ஆா்ப்பாட்டம்

8th Jan 2020 05:20 AM

ADVERTISEMENT

தில்லியில் மாணவா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்குள் புகுந்து தாக்கியவா்களைக் கண்டித்தும், அவா்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவா் சங்கத்தின் கல்லூரி கிளைத் தலைவா் பவித்ரா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜி. அரவிந்த்சாமி கண்டன உரையாற்றினாா். மாவட்ட குழு உறுப்பினா்கள் அபிராமி, சரண்யா, தீபிகா உள்பட ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனா்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிா்ப்பு: இதேபோல, வல்லம் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம் முன் மாணவா் உதயன் தலைமையில் ஏராளமான மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து முழக்கங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT