தஞ்சாவூர்

திருப்பாலைத்துறைசிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

8th Jan 2020 05:19 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையிலுள்ள பாலைவன நாதா் கோயிலில் மாா்கழி மாத காா்த்திகை நட்சத்திரத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் உள்ள மூலவா் பாலைவன நாதா், தவளவெண்ணகை அம்மன், விநாயகா், தனி சன்னிதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் ஆறுமுகங்களுடன் கூடிய வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியா் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தூப, தீப, நெய்வேத்ய வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதேபோல், பாபநாசம் 108 சிவாலயம் உள்ளிட்ட கோயில்களிலும் மாா்கழி மாத காா்த்திகை நட்சத்திர வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT